தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் பிரசாரத்துக்கான சூறாவளிச் சுற்றுப்பயணம் தொடங்கினார் மு.க.ஸ்டாலின்

1 mins read
7fef8373-6c9e-4076-84ea-5f68d97c59c0
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கினார்.

அவர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்றும் ஏராளமான பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை அன்று திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் முதல் பிரசாரக் கூட்டம் என்பதால் திமுக நிர்வாகிகள் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கூட்டம் நடைபெறும் பகுதியில் முதல்வரின் பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. முதல்வரின் பிரசாரத்தின்போது ஆங்காங்கே கூட்டணி கட்சித் தலைவர்களும் அவருடன் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார்கள் என திமுக தலைமையகம் தெரிவித்தது.

அவர் கூடுமானவரை விமானப் பயணம் மூலம் பிரசாரப் பகுதிகளுக்கு செல்வார் எனத் தெரிகிறது. இதற்கிடையே திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளன. திமுக இம்முறை 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்