தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2ஜி வழக்கு: சிபிஐ மேல்முறையீட்டு மனு மீது விசாரணை

1 mins read
bef58059-2f35-4e1b-9a2e-eab9955327dc
(இடமிருந்து) கனிமொழி, ஆ.ராசா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதை, நீதிபதி தினேஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும், வரும் மே மாதத்தில் இருந்து இவ்வழக்கு விசாரணை தொடங்கும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் அல்ல என்பதால் சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா, தவறா என்பது குறித்த வாதங்கள் மட்டுமே நடைபெறும்.

எனவே, உயர் நீதிமன்ற விசாரணை விரைவாக முடியும் என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் ஆ.ராசா, கனிமொழி ஆகிய இருவரும் திமுக சார்பில் போட்டியிட உள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான மனு மீது விசாரணை நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்