விஜயகாந்த் வாரிசு, ராதிகா இடையே நேரடிப் போட்டி

விஜயகாந்த் வாரிசு, ராதிகா இடையே நேரடிப் போட்டி

1 mins read
b044bea1-3b0c-437b-a85c-2b41bef24875
(இடமிருந்து) விஜய பிரபாகர், ராதிகா. - படம்: ஊடகம்

சென்னை: நடிகை ராதிகாவும் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரும் எதிர்வரும் தேர்தலில் நேருக்குநேர் மோத உள்ளனர்.

பாஜகவுடன் தனது சமத்துவ மக்கள் கட்சியை அண்மையில் இணைத்தார் சரத்குமார். இதையடுத்து அவரது மனைவியும் திரைப்பட நடிகையுமான ராதிகாவை விருதுநகர் தொகுதியில் களமிறக்குகிறது பாஜக.

இதற்கிடையே, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் விருதுநகர் தொகுதியின் வேட்பாளராக விஜய பிரபாகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து வாக்காளர்களின் கவனம் ஈர்க்கும் முக்கியமான தொகுதியாக உருவெடுத்துள்ளது விருதுநகர்.

ராதிகா ஏற்கெனவே அரசியலில் முன் அனுபவம் உள்ளவர். இந்நிலையில் அரசியலுக்குப் புதுவரவான விஜய பிரபாகர் போட்டியிட உள்ளார்.

இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்