சிவிஜில் செயலி மூலம் இதுவரை 864 புகார்கள் பதிவாகி உள்ளது: சத்ய பிரதா சாஹு

சிவிஜில் செயலி மூலம் இதுவரை 864 புகார்கள் பதிவாகி உள்ளது: சத்ய பிரதா சாஹு

1 mins read
511e7bb8-9460-4f1e-a2a4-af8f01834986
சத்ய பிரதா சாஹு. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கும் சிவிஜில் செயலி மூலம் இதுவரை 864 புகார்கள் பதிவாகி உள்ளதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

பொது மற்றும் அரசு இடங்களில் உள்ள சுவர்களில் காணப்பட்ட 2.97 லட்சம் தேர்தல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

தனியார் இடங்களில் 96,514 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இம்முறை அரசியல் கட்சிகளில் நட்சத்திர பேச்சாளர்கள் 159 பேருக்கு தேர்தல் பிரசாரத்துக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்துக்கு தேர்தல் பார்வையாளர்களாக தொகுதிக்கு ஒருவர் வீதம் 39 பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் சத்ய பிரதா சாஹு கூறினார்.

மேலும் இரு தொகுதிகளுக்கு ஒருவர் என்ற வகையில் 20 காவல்துறை தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்