கடலூர் மக்களவைத் தொகுதியில் சௌமியா அன்புமணி போட்டி

கடலூர் மக்களவைத் தொகுதியில் சௌமியா அன்புமணி போட்டி

1 mins read
bbf222e9-abc6-4130-9f1c-67ed076666c1
சௌமியா அன்புமணி. - படம்: ஊடகம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் உடனடியாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் கடலூர் தொகுதிக்காக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவரான முனைவர் சௌமியா அன்புமணி கடலூரில் களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்