தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலைமை தமிழகத்துக்கும் ஏற்படலாம்’

1 mins read
92faeb10-c4c4-4a04-8633-fcc043b004a4
திருவாரூர் பிரசாரக் கூட்டத்தில் பேசும் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

திருவாரூர்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது என்றும் நாட்டில் ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலைமை நாளை தமிழகத்துக்கும் ஏற்படலாம் என்றார்.

“நம் கண்ணுக்கு முன்னால் ஜம்மு, காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டதைப் பார்த்தோம். அம்மாநிலத்தை மக்களின் விருப்பத்துக்கு மாறாக இரண்டாகப் பிரித்தனர். அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தார்கள்.

“இந்த நடவடிக்கையில் இருந்து முன்னாள் முதல்வர்களும் தப்பவில்லை. அங்கு சட்டமன்றம் கிடையாது. காஷ்மீருக்கு ஐந்து ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை. இப்போதுகூட, ஜம்மு, காஷ்மீருக்குத் தேர்தல் அறிவிக்கவில்லை. இதுதான் பாஜக பாணி, சர்வாதிகாரம்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

இனியும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தமிழகத்துக்கு அழிவுக் காலமாக அமைந்துவிடும் என்றும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நல்லதல்ல என்றும் முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறினார்.

இம்முறை தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என திமுகவினரிடம் வலியுறுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் பங்கேற்கும் பிரசார கூட்டங்களில் ‘40க்கு 40’ என்ற பதாகைகள் தவறாமல் இடம்பெறுகின்றன.

நாட்டில் உள்ள அனைத்து கட்டமைப்புகளையும் பாஜகவினர் சிதைத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தன் கையில் கிடைத்த அதிகாரத்தைப் பிரதமர் மோடி தவறாக பயன்படுத்தி உள்ளதாகச் சாடினார்.

குறிப்புச் சொற்கள்