சந்தன வீரப்பன் மகளைக் களமிறக்கிய நாம் தமிழர் கட்சி

சந்தன வீரப்பன் மகளைக் களமிறக்கிய நாம் தமிழர் கட்சி

1 mins read
f6c4a5a1-e719-49ae-8dcb-1ba5ec16afe4
வித்யாராணி. - படம்: ஊடகம்

சென்னை: விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம்காண உள்ளது. இதையடுத்து தமிழகம், புதுவையில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

எனினும் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் யார் என்பது மர்மமாக இருந்தது.

இந்நிலையில், சந்தன வீரப்பனின் மகள் வித்யாராணிதான் கிருஷ்ணகிரியில் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் அறிமுக நிகழ்வையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

நாம் தமிழர் கட்சிக்கு இம்முறை தேர்தல் ஆணையம் ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்