தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: 10 ஆயிரம் கோலங்கள் போட்டு அசத்திய ஒரு லட்சம் பெண்கள்

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: 10 ஆயிரம் கோலங்கள் போட்டு அசத்திய ஒரு லட்சம் பெண்கள்

1 mins read
593a37e8-fe2d-4df1-84bf-a33290b37d30
கோலங்களைப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். - படம்: ஊடகம்

விருதுநகர்: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் களம் மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், கோலங்கள் மூலம் விழிப்புணர்வு எனும் கருப்பொருளில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு, 750 இடங்களில் ஒரு லட்சம் பெண்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் 10 ஆயிரம் கோலங்களைப் போட்டனர்.

“100 விழுக்காடு தவறாமல் வாக்களிப்போம்’, `என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ எனும் முழக்கங்களை வலியுறுத்தி இந்தக் கோலமிடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்