சென்னை: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் பல்வேறு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த எட்டு நாள்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.11.5 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ரூ.38 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்களும் சிக்கியுள்ளன.
ரூ.76 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுப்புட்டிகளும் சென்னையில் மட்டும் இதுவரை 14 கிலோ தங்கமும் பிடிபட்டிருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்தி வரும் சோதனைகளின் போது போதைப் பொருள்களும் அதிக அளவில் சிக்கி வருவது காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையடுத்து சோதனை நடவடிக்கை மேலும் தீவிரமடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

