சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரையடுத்து, தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று, அத்தொகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. எனினும், இதற்கு அதிமுக நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதியைப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜெயவர்தன், திருமண மண்டப உரிமையாளர் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவாகி உள்ளது.
எனினும், உரிய அனுமதியைப் பெற்றுத்தான் கூட்டம் நடத்தப்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தென் சென்னை தொகுதியில் அதிமுக பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.


