தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

1 mins read
d3ef7be8-f832-4528-a67e-e197e2f07eb1
பிரசாரத்தின்போது துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார் எடப்பாடி பழனிசாமி. - படம்: ஊடகம்

சேலம்: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது பரப்புரையைத் தொடங்கியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் மாவட்டம் நந்தவள்ளி அருகே உள்ள கோயிலில் வழிபாடு செய்த பின்னர், சேலம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவர் நடந்தபடி வாக்குச் சேகரித்தார்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். இந்நிலையில், அதிமுக 33 வேட்பாளர்களைக் களமிறக்கி உள்ளது.

தமிழகத்தில் மீதமுள்ள ஆறு தொகுதிகளில் கூட்டணிக்கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை மந்தைவெளி பகுதியில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்திய எடப்பாடி பழனிசாமி, பிரசாரத்தின்போது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.

வழிநெடுகிலும் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்