சத்யபிரதா சாகு: தமிழ்நாட்டில் 17,032 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

சத்யபிரதா சாகு: தமிழ்நாட்டில் 17,032 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

1 mins read
2c23cb6a-4fbf-44ab-ac9e-5860a156f0bd
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 17,032 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

‘சிவிஜில்’ செயலி மூலம் கிடைத்த புகார்கள் 11,305 ஆக அதிகரித்துள்ளன. மேலும், 453 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக தேர்தல் தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் மாநிலத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, மத்திய, மாநில அரசு வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்