ஏரிக்குள் விழுந்தது கூகல் வரைபடத்தை பயன்படுத்தி ஓட்டி வரப்பட்ட கார்

ஏரிக்குள் விழுந்தது கூகல் வரைபடத்தை பயன்படுத்தி ஓட்டி வரப்பட்ட கார்

1 mins read
42f9a7c3-4e89-414a-99fd-655443062c3c
கூகல் வரைபடத்தைப் பின்பற்றி இயக்கப்பட்ட கார், ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. - படம்: தமிழக ஊடகம்

சேலம்: கூகல் வரைபடத்தைப் பார்த்து கேரளத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் ஒன்று திங்கள்கிழமை காலை சேலம் மகுடஞ்சாவடியை அடுத்த கனககிரி பகுதி அருகில் உள்ள ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி வந்த ஓட்டுநர் உயிர் தப்பினார்.

இதனையடுத்து, படகு இயக்கும் ஊழியர்கள் உதவியுடனும் பாரந்தூக்கி உதவியுடனும் கார் மீட்கப்பட்டது.

அண்மைக்காலமாக பல்வேறு பகுதிகளிலும் கூகல் வரைபடத்தைப் பயன்படுத்தி ஓட்டிச் செல்லப்படும் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வரும் சூழல் அதிகம் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்