தியாகி குமரன் சிலைக்கு பாஜகவினர் திருநீறு பட்டை பூசியதால் பரபரப்பு

தியாகி குமரன் சிலைக்கு பாஜகவினர் திருநீறு பட்டை பூசியதால் பரபரப்பு

1 mins read
0dca43a4-6c73-4b32-b7cd-3cf58e9380b9
திருப்பூரில் உள்ள தியாகி கொடிகாத்த திருப்பூர் குமரன் சிலைக்கு பாஜகவினர் திங்கட்கிழமை பட்டை போட்டு மாலை அணிவித்ததால் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. - படம்: ஊடகம்

திருப்பூர்: திருப்பூரில் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள தியாகி கொடிகாத்த திருப்பூர் குமரன் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு திருநீறு பட்டை போட்டு பரப்புரையைத் தொடங்கினர் பாஜகவினர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் திங்கள்கிழமை திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், பாஜகவினர் குமரன் சிலைக்கு திருநீறு பட்டை போட்டு பின்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கொடிகாத்த குமரன் சிலைக்கு பட்டை போட்டு மத அடையாளத்தை உருவாக்குவதாக அரசியல் கட்சிகளிடமும் மக்களிடமும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

தேச விடுதலைக்காகப் போராடிய கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் அவர் பிறந்த சென்னிமலையில் கட்டவேண்டும் என்பது பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்