தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைப்பேசியில் ஐபிஎல் பார்த்தபடியே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

1 mins read
036eed49-2886-4b93-80f9-c5b40ff71915
ஐபிஎல் போட்டியை பார்த்தபடி பேருந்தை ஓட்டினார். - படம்: ஊடகம்

கடலூர்: கைப்பேசியில் கிரிக்கெட் போட்டி நேரலையை பார்த்துக்கொண்டே பேருந்து ஓட்டிய ஓட்டுநரால் பயணிகள் பீதியடைந்தனர்.

திங்கட்கிழமை இரவு மும்பை, குஜராத் அணிகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது கைப்பேசியில் நேரடி ஒளிபரப்பை பார்த்தபடியே பேருந்தை இயக்கியதாகக் கூறப்பட்டது.

இதனால் கவனம் இழந்த அவர், இரண்டு முறை முன்னே சென்ற கார், அரசுப் பேருந்தின் மீது மோதுவதுபோல் சென்றுள்ளார். இதையடுத்து, பயணிகள் கூச்சலிட்டனர். மேலும் அந்த ஓட்டுநரிடம் கைப்பேசியை அணைத்துவிட்டு பேருந்தை இயக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஓட்டுநர்மீது விருத்தாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்