தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசுப் போக்குவரத்துக் கழக முதல் பெண் நடத்துநர்

1 mins read
1d22bc54-ae7e-493b-b1e7-bf528e0f2eb6
ரம்யா. - படம்: ஊடகம்

மதுரை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் நடத்துநராகத் தேர்வாகி உள்ளார் ரம்யா.

35 வயதான இவர், கும்பகோணத்தில் தற்போது பணியில் சேர்ந்துள்ளார்.

ரம்யாவின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் புதூர் ஆகும்.

இவருடைய கணவர் பாலாஜி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றியவர். கொரோனா தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து, கருணை அடிப்படையில் தனது கல்வித்தகுதிக்கு ஏற்ப பணி வழங்குமாறு அரசிடம் ரம்யா விண்ணப்பித்தார்.

இதையடுத்து, அவருக்கு நடத்துநர் பணி கிடைத்துள்ளது. மற்றப் பெண்களுக்கு தாம் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

குறிப்புச் சொற்கள்