ரோஜாவுடன் போட்டி போட அனுஷ்காவை நாடிய கட்சி

ரோஜாவுடன் போட்டி போட அனுஷ்காவை நாடிய கட்சி

படம்: இணையம்

28 Mar 2024 - 6:28 pm

1 mins read

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியில் நடிகை ரோஜா மூன்றாவது முறையாகக் களமிறங்கியுள்ளார்.

அங்கு ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி வேட்பாளராக நடிகை அனுஷ்கா களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜனசேனா கட்சியினரும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் எனத் தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால், அனுஷ்கா தனது அரசியல் வருகை குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்
ரோஜாஅனுஷ்காநாடாளுமன்றத் தேர்தல்ஆந்திரா