விஜய் கட்சியுடன் இணைந்து செயல்படுவேன்: ஓபிஎஸ் மகன்

விஜய் கட்சியுடன் இணைந்து செயல்படுவேன்: ஓபிஎஸ் மகன்

1 mins read
93428118-f953-4861-820b-8f77af13d508
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

தேனி: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அப்போது அவர், “ராமநாதபுரம் தொகுதியில் எனது தந்தை ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெறுவார். அதேபோல, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார்,” என்று கூறினார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த ரவீந்திரநாத், “ஜனநாயக நாட்டில் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். அன்பு சகோதர் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்.

“யார் நலத்திட்டங்களை மக்களுக்கு செய்தாலும் நல்ல விஷயம்தான். விஜய் கட்சி தொடங்கியது அவரது அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

“தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு பாதையை அவர் வகுத்து தந்தால் அவருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்