குண்டுமணி அளவிலான தங்கம் கூட இல்லை: திருமாவின் சொத்து விவரங்கள்

குண்டுமணி அளவிலான தங்கம் கூட இல்லை: திருமாவின் சொத்து விவரங்கள்

1 mins read
c924c943-19c3-41eb-8d8b-7d83485eb508
திருமாவளவன். - படம்: ஊடகம்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் குறிப்பிட்ட ஒரு வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய்கூட இருப்பில் இல்லை என தெரியவந்துள்ளது.

எனினும் நான்கு கார்கள் உள்ளிட்ட ஐந்து வாகனங்களை வைத்திருப்பதாக தனது வேட்புமனுவில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னிடம் குண்டுமணி தங்கம், வெள்ளி பொருள்கள் இல்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமக்கு மொத்தமாக ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வேறு இரண்டு வங்கிக் கணக்குகளில் திருமாவளவன் பெயரில் ரூ.10 லட்சம், ரூ.3 லட்சம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்