தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரூரில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள்

1 mins read
1f4c5844-8d6e-4d38-b009-2db82ba2bf1e
76 பெண்கள் உள்பட 950 பேர் தமிழகத்தில் போட்டியிடுகிறார்கள். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அவர்களில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும் குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

ஈரோடு தொகுதியில் அதிகபட்சமாக 16 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர்.

தென்சென்னை தொகுதியில் அதிகபட்சமாக 5 பெண்கள் போட்டியிடுகின்றனர். 6 தொகுதிகளில் பெண்கள் யாரும் போட்டியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்