33 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் உள்பட மூவர் இலங்கை திரும்பினர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் புதன்கிழமை (ஏப்ரல் 3) இலங்கை சென்றடைந்தனர்.

இவர்கள் மூவரும் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, திருச்சி முகாமில் இருந்து காவல்துறையின் பாதுகாப்புடன் மூவரும் நேற்று (ஏப்ரல் 2) இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை சென்ற மூவரும் இலங்கை நேரப்படி 11.30 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி பகல் 2.00) இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.

ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டில் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் எழுவர் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் மூவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உறவினர்களுடன் இணைக்கப்பட்டனர். ஏனைய நால்வர் இலங்கையை சேர்ந்தவர்கள். அவர்கள் இலங்கை செல்வதற்கு ஆவணங்கள் இல்லை எனும் காரணத்தால் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நால்வரில் சாந்தன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற மூவரையும் உயிருடன், உறவினர்களிடம் கையளிக்க வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டதால் மூவரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வெளிநாடுகளில் உள்ள தமது உறவினர்களிடம் செல்வதற்கு ஏதுவாக அனைத்துலக கடவுச்சீட்டினை வழங்குமாறு மூவரும் கோரிக்கை விடுத்தனர்.

தனது மகளுடன் லண்டனில் வசிக்கப் போவதாகவும் அதற்கு விசா எடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கக்கோரியும் முருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணைத் தூதரகம் தரப்பில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மூவருக்கும் இலங்கை செல்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டு அவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!