சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது.
இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. கூட்டணிக் கட்சியினருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வடமாநிலத் தலைவர்களும் தமிழகம் வருகிறார்கள்.
இந்நிலையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற 12ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வர வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டன.
அன்று ஒரே நாளில் 2 இடங்களில் பிரசாரம் செய்யும் வகையில் பயணத்திட்டம் தயாராவதாகவும் கூறப்படுகிறது.
திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர், தூத்துக்குடி, தென்காசி தி.மு.க. வேட்பாளர்கள், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து நெல்லையில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆதரவு திரட்டுவார் என்று கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அவர் கோவையில் பிரசாரம் செய்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டக்கூடும்.
பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் வயநாட்டில் அவர் போட்டியிடும் பகுதியில் பிரசாரம் செய்ய செல்வார் என்று இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.