தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக பணக்காரர்கள் பட்டியலில் தமிழர்கள்

1 mins read
82620cb4-4586-4f49-856b-21e7dd3dfac1
உலகப் பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழர்களான தயாநிதி மாறன், சுரேஷ் கிருஷ்ணா, ஷிவ் ரெட்டி. - படம்: இணையம்

உலக பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. 200 இந்தியர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழர்களும் உள்ளனர்.

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஷிவ் நாடார் உலக பணக்காரர்கள் பட்டியலில் 39வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் 3வது இடம். 78 வயதான இவரின் சொத்து மதிப்பு 34.6 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் ரூ. 2.5 லட்சம் கோடி.

ஸோகோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்புவின் தங்கையான ராதா வேம்பு உலகளவில் பணக்காரர் பட்டியலில் 949வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 3.3 பில்லியன் அமெரிக்க டாலர். (ரூ.24 ஆயிரம் கோடி). அதேபோல சகோதரர் சேகர் வேம்பு, 2.5 பில்லியன் சொத்து மதிப்போடு (ரூ.18,500 கோடி) உலகளவில் 1330 இடத்தில் உள்ளார்.

இந்தியளவில் 82வது இடத்தில் உள்ள கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலராக (ரூ. 22,200 கோடி) உள்ளது.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவரான வேணு ஸ்ரீநிவாசன், இந்தியளவில் பணக்காரர்கள் பட்டியலில் 95வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 3.6 பில்லியன் டாலர்.

சென்னையை மையமாகக் கொண்ட சுந்தரம் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவரான சுரேஷ் கிருஷ்ணாவின் சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டாலர். டிவிஎஸ் குழுமத்தின் மூன்றாம் தலைமுறை உறுப்பினர் சுரேஷ் கிருஷ்ணா.

குறிப்புச் சொற்கள்