நாடாளுமன்றத் தேர்தல்: தபால் வாக்குகளைப் பெறும் பணி தொடக்கம்

நாடாளுமன்றத் தேர்தல்: தபால் வாக்குகளைப் பெறும் பணி தொடக்கம்

1 mins read
2502985d-3854-4d9f-b601-f39799dfc6cf
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தபால் வாக்குகளைப் பெறும் பணி தொடங்கியுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தபால் வாக்கு செலுத்தும் வசதி தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தபால் வாக்குகளைப் பெறும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது.

இந்த நாள்களில் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி மீண்டும் ஒரு முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்