பள்ளி வாகனங்களுக்குப் புதிய கட்டுப்பாடு

பள்ளி வாகனங்களுக்குப் புதிய கட்டுப்பாடு

1 mins read
d7b69584-aafb-4780-ad9b-0e1ecc951cfd
பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராகப் பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

இதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். பத்து ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும். ஓட்டுநர் மற்றும் உதவியாளர்மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பதைப் பள்ளி நிர்வாகங்கள் சரிபார்க்க வேண்டும்.

ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மது அருந்தியுள்ளார்களா என்பதை தினமும் பரிசோதிக்க வேண்டும். போக்சோ சட்ட விதிகள் பற்றி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்குத் தெளிவாக விளக்கப்பட வேண்டும். பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

பள்ளி வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளித் தகவல் மேலாண்மை இணையப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குறிப்புச் சொற்கள்