தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கார் மீது பேருந்து மோதி விபத்து; அதிமுக பிரமுகர் படுகாயம்

1 mins read
585764b5-bfec-4939-b6e0-887a87052f8a
தருமபுரியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர். - படம்: தமிழக ஊடகம்

கடத்தூர்: கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் பிள்ளைத் தெருவை சேர்ந்தவர் ராமன், 67. அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரான இவரும் கடத்தூரைச் சேர்ந்த விநாயகர் சரவணன் மற்றும் அதிமுகவினர் சிலரும் தருமபுரியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விநாயக சரவணனின் காரில் சென்றனர். பின்னர் அவர்கள் கூட்டம் முடிந்து வீடு திரும்பினர்.

அப்போது மணியம்பாடி அருகே சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பேசிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து, காரின் மீது மோதியதில் காரின் அருகில் நின்றிருந்த ராமன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து கடத்தூர்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்