மேட்டுப்பாளையத்தில் வினோதம்: நோட்டாவுக்கு வாக்கு சேகரித்த விவசாயிகள்

மேட்டுப்பாளையத்தில் வினோதம்: நோட்டாவுக்கு வாக்கு சேகரித்த விவசாயிகள்

1 mins read
447b9ab2-bc2b-4eb5-b09b-998a3f8484c1
அரசியல் கட்சிகளைப் புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கப்படுகிறது. - படம்: தமிழக ஊடகம்

மேட்டுப்பாளையம்: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன.

ஆனால், நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், “மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாப் பகுதியில் காட்டு யானைகள், மான், சிறுத்தை, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் நுழைந்து பயிர்களைத் தின்று சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

“இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன அதிகாரிகளிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சிகளைப் புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்,” என்று தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்