சென்னையில் சூடுபிடிக்கும் ஆடுகள் விற்பனை

சென்னையில் சூடுபிடிக்கும் ஆடுகள் விற்பனை

1 mins read
c10e09cd-da98-4a8b-af9a-783f9c80089b
சென்னையில் மட்டும் ரூ.21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  - படம்: பிக்சாபே

சென்னை: தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையிலும் ஆடுகள் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. பண்டிகை காலங்களில் சென்னையில் இறைச்சிக்கான தேவை அதிகமாக இருக்கும் என்பதால் வட மாநிலங்களில் இருந்து ஆடுகள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும்

அந்த வகையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ரமலான் பண்டிகைக்காக 30,000 ஆடுகள் வரவழைக்கப்படுகின்றன.

சனிக்கிழமை முதல் சென்னையில் ரெட்டேரி, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை நடைபெறும்.

ஒரு ஆடு ரூ.7,000 முதல் 7,500 வரை விற்பனையாகக்கூடும். இதன் மூலம் சென்னையில் மட்டும் ரூ.21 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு சந்தைகளிலும் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மறுபக்கம் ஆடுகள் வெளிமாநிலங்களில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்