நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

1 mins read
4bd1837f-c301-4013-ba82-98d3faf69fa3
வடை சுட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர். - படம்: ஊடகம்

தேனி: நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் சில வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பூக்கடைக்குச் சென்று பூ தொடுப்பது, தேநீர்க் கடையில் தேநீர் அருந்துவது, வயலில் இறங்கி விவசாயத் தொழிலாளர்களின் ஆதரவைக் கேட்பது என நாள்தோறும் பலவிதமாக பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

தேனி திமுக தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவு கேட்டு திமுகவினர் பிரசாரம் மேற்கொண்டபோது வடை சுட்ட பெண்மணிக்கு உதவி செய்து நூதன முறையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்