புதுவை: நாடு முழுவதும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் பதவி அளிக்கப்பட்டு பாஜகவின் முகவர்களாக மாற்றப்படுகிறார்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு, முழித்துக் கொண்டிருப்பதாக புதுவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது அவர் தெரிவித்தார்.
“ஆளுநர்களால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமல்லாமல், பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் இதே பிரச்சினைதான்.
“ஒட்டுமொத்தமாக அனைவரும் டெல்லி தலைமையின்கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம்.
“பிரதமர் மோடி சமயம், சாதியின் பெயரால் பிரசாரம் செய்கிறார். சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்துப் பேச மறுக்கிறார். சமூக நீதியையும் இட ஒதுக்கீட்டையும் பாதுகாக்கப்போவதாக அவர் சொன்னதே இல்லை.
“மக்களுக்காக ஆட்சி நடத்தாமல் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக ஆட்சி நடத்துகிறார்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் குற்றம்சாட்டி உள்ளார்.
எல்லாரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றார் அவர்.