தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்: வருத்தப்பட்ட பீட்டர் அல்போன்ஸ்

1 mins read
6f0eadc6-fc51-4327-aaa1-b693aeb72e5e
மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ். - படம்: தமிழக ஊடகம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் நவாஸ்கனியை ஆதரித்து மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

பின்னர், ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்த கிறிஸ்தவர்களிடம் துண்டுப்பிரசுரங்களை வழங்கி பீட்டர் அல்போன்ஸ் வாக்கு சேகரித்தார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் பீட்டர் அல்போன்ஸ் பேசியபோது, “எனது நண்பர் ஓ.பன்னீர்செல்வம் நிலையைக் கண்டு எனக்கு வருத்தமாக உள்ளது. முதல்வராக இருந்தவர், அதிமுகவில் 2வது இடத்தில் இருந்தவர். தற்போது ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலையை நினைத்து உண்மையிலேயே வருந்துகிறேன். அதேநேரம், அவருடைய பாஜக ஆதரவு அரசியல் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,” என அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்