தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்கு சேகரிப்பின்போது கிளி சோதிடம் பார்த்த தங்கர்பச்சான்

1 mins read
20830b4b-f20b-436d-8174-276d848fe775
கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருந்தது. - படம்ட தமிழக ஊடகம்

கடலூர்: கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக பிரபல சினிமா இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு இருந்த கிளி சோதிடர், தன்னிடம் சோதிடம் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு சம்மதித்த தங்கர்பச்சான் அங்கு அமர்ந்து கிளி சோதிடம் பார்த்தார். அப்போது கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருந்தது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் வாக்கு சேகரிக்கச் சென்றார்.

பின்னர் அவர் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்குச் சென்று, மாம்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்.

குறிப்புச் சொற்கள்