புதுச்சேரி: முத்தங்களைப் பறக்கவிட்டு பிரசாரம் செய்த பெண் எம்எல்ஏ

புதுச்சேரி: முத்தங்களைப் பறக்கவிட்டு பிரசாரம் செய்த பெண் எம்எல்ஏ

1 mins read
be1f0910-688e-463d-8e50-c935276680ac
பிரசாரத்தின்போது முதல்வர் முன்னிலையில் முத்தங்களைப் பறக்கவிட்ட சந்திர பிரியங்கா எம்எல்ஏ. - படம்: சமூக ஊடகம்

புதுச்சேரி: புதுவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர் ரங்கசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (எப்ரல் 9) என்.ஆர்.காங்கிரஸ்-பாஜகவினருடன் திறந்த வாகனத்தில் சென்று முதல்வர் ரங்கசாமி பிரசாரம் செய்தார்.

அவருடன் முன்னாள் அமைச்சரும் நெடுங்காடு தொகுதி எம்எல்ஏவுமான சந்திரபிரியங்காவும் கலந்துகொண்டு வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார்.

நெடுங்காடு பகுதியில் பிரசாரம் செய்தபோது முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலையில் தொண்டர்களை நோக்கி சந்திர பிரியங்கா எம்எல்ஏ திடீரென்று முத்தங்களைப் பறக்கவிட்டார் (ஃபிளையிங் கிஸ்).

அதனால் அங்கு கூடி இருந்த தொண்டர்கள் உற்சாகத்தில் பதில் முத்தம் அனுப்பினர். அதை சந்திரபிரியங்கா கையால் ஏற்றுக் கொண்டது பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக வலம் வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் எட்டு நாள்களே உள்ளநிலையில், பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் வாக்காளரைக் கவர புதுப் புது உத்திகளைக் கைக்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவெங்கும் தேர்தல்களம் மிகவும் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் களைகட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்