தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பத்தூரின் 14 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

1 mins read
6e3f346f-eddf-4edc-8511-2834d1b904d4
திருப்பத்தூர் ரயில் நிலையம். - படம்: ஊடகம்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் 14 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

அம்மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், அரசு அதிகாரிகள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக, 14 கிராமங்களைச் சுற்றியுள்ள, வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்பது இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இது தொடர்பாக மனு அளித்த போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 14 கிராமங்களிலும் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கிராமசபை கூடி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்