பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள கோழிப்பண்ணை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமையன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
காலை தொடங்கி நள்ளிரவு வரை நீடித்த சோதனையின்போது ரூ.32 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
அருள் முருகு, சரவண முருகு ஆகிய இருவருக்கும் சொந்தமான கோழிப்பண்ணை, அதன் அலுவலகம், ஒரு பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் வெவ்வாய்க்கிழமை நள்ளிரவைக் கடந்து சோதனை நீடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட தொகை பொள்ளாச்சியில் உள்ள பாரதி ஸ்டேட் வங்கி கிளையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெருந்தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவல் பொள்ளாச்சி வட்டாரங்களில் விவாதப் பொருளாகி உள்ளது.
இந்தப் பணத்தை வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்யத் திட்டமிட்டிருந்தனரா எனும் கோணத்தில் தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.