வெளிமாநில ஊர்க்காவல் படையினர் தமிழகம் வருகை

வெளிமாநில ஊர்க்காவல் படையினர் தமிழகம் வருகை

1 mins read
f038c833-90b8-4654-930c-e4388c813328
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு. - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: இம்மாதம் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து கூடுதலாக ஊா்க்காவல் படையினர் தமிழகத்திற்கு வரவிருப்பதாக தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்துக்குத் தோ்தல் ஆணையத்தால் நிா்ணயிக்கப்பட்ட 190 கம்பெனி துணை ராணுவப் படையினா் பல்வேறு மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். தேவை அடிப்படையில் அவர்கள் பல்வேறு தொகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்பட உள்ளனா். குறிப்பாக, பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அவா்கள் அதிக அளவில் பணியமா்த்தப்படுவர்.

“அவ்வகையில், சென்னை, மதுரை, கோவை மாவட்டங்களுக்குத் தலா ஏழு கம்பெனிகளும், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்குத் தலா ஆறு கம்பெனிகளும், திருநெல்வேலி, விருதுநகா், திருப்பூா், சேலம் ஆகிய மாவட்டங்களுக்குத் தலா ஐந்து கம்பெனிகளும் பிரித்து அனுப்பப்பட உள்ளன,” என்று அவர் சொன்னார்.

அத்துடன், தமிழகக் காவல்துறையின் அனைத்து படைப் பிரிவினா், ஊா்க்காவல் படையினா், முன்னாள் ராணுவத்தினரும் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்தமிழ்நாடுகாவல்துறை