2026 தான் இலக்கு: விஜய பிரபாகரன்

2026 தான் இலக்கு: விஜய பிரபாகரன்

படம்: தமிழக ஊடகம்

12 Apr 2024 - 5:07 pm

1 mins read

விருதுநகர்: “வரும் 2026ஆம் ஆண்டில் அதிமுக, -தேமுதிக, ஆட்சி அமைய வேண்டும். பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்” என, விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.

விருதுநகர் மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் வாக்குச் சேகரித்தார்.

“2026 சட்டசபைத் தேர்தல் தான் நமது இலக்கு. அதற்கான தொடக்கமாக 2024 மக்களவைத் தேர்தல் அமையப் போகிறது.

“உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நிறைவேற்றித் தந்து உங்கள் குரலாக ஒலிப்பேன். நான் வெற்றி பெற்றால் இதே தொகுதியில் வீடு எடுத்து தங்குவேன்.

“ஏதோ வந்தேன், பேசினேன் என நினைக்க வேண்டாம். உங்களுக்காகச் சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்,” என்று அவர் பேசினார்.

குறிப்புச் சொற்கள்