அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

1 mins read
ddd7748c-5e6b-4be9-81f4-9e967c371592
ராமநாதபுரத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். - படம்: தமிழக ஊடகம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்துக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டரில் வந்திறங்கினார்.

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை வந்திறங்கிய அந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் பணமோ அல்லது பொருள்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காக அண்ணாமலை ராமநாதபுரத்துக்கு வந்திருந்தார்.

ராமநாதபுரத்தில் உள்ள அரண்மனை முன்பு பிரசாரத்தில் அவர் ஈடுபட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்