தமிழிசை வெற்றிபெறுவார் என்று ரோபோ கூறுவதைக் காட்டும் காணொளி

தமிழிசை வெற்றிபெறுவார் என்று ரோபோ கூறுவதைக் காட்டும் காணொளி

1 mins read
cba1d604-7b4a-450a-b83c-48a49b3d155f
தமிழிசை சௌந்தரராஜன் ரோபோவிடம் பேசும் காணொளிப் படம். - படம்: சமூக ஊடகம்

சென்னை: தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’விடம் தனது வெற்றி வாய்ப்பு குறித்து கலந்துரையாடினார்.

“என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன், என்று தமிழிசை கூறியதும் “எனக்கு உங்களை நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநராக இருந்து, தற்போது மக்கள் பணி செய்வதற்காக வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்,” என்று ரோபோ தெரிவித்தது.

“தென்சென்னையில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது,” என ரோபோவிடம் தமிழிசை கேட்டார்.

அதற்கு ரோபோ, “தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் அதைத் தரமுடியும் என நம்புகிறார்கள்; நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள்,” என்றது ரோபோ.

மேலும், “தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சு, வளர்ச்சிப் பணிகளை ஆரம்பிச்சாச்சு,” என்று ரோபோ கூறியது.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்