தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாஜகவின் திட்டம்: முதல்வர் குற்றச்சாட்டு

1 mins read
cafcfd9b-1831-49dc-ae15-8455c4a710ed
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: அரசியல் சட்டத்தை மாற்ற பாஜக திட்டமிடுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றில், இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளிச்சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை. ஆனால் பாஜக அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது.

“நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது பாஜக,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்