அனுமதியின்றிப் பரப்புரை: நாம் தமிழர் வேட்பாளர்மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றிப் பரப்புரை: நாம் தமிழர் வேட்பாளர்மீது வழக்குப்பதிவு

படம்: தமிழக ஊடகம்

17 Apr 2024 - 6:19 pm

1 mins read

திருச்சி: அனுமதி பெறாமல் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சிற்றூரில் பரப்புரை செய்ததாக திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ்மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் கடந்த 2022 டிசம்பர் 26ஆம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, இம்முறை மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அவ்வூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து ஊர் முகப்பில் ஒரு பதாகையையும் அவர்கள் வைத்துள்ளனர்.

தேர்தல் பரப்புரைக்கு எந்த ஒரு கட்சியையும் ஊருக்குள் அவர்கள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்