திருப்பரங்குன்றத்தில் பிரேமலதா தீவிர பிரசாரம்

திருப்பரங்குன்றத்தில் பிரேமலதா தீவிர பிரசாரம்

படம்: தமிழக ஊடகம்

17 Apr 2024 - 8:01 pm

1 mins read

திருப்பரங்குன்றம்: விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரேமலதா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

புதன்கிழமை காலை பிரேமலதா திருப்பரங்குன்றத்தில் உள்ள பேருந்து நிலையம் முதல் சுப்பிரமணியசுவாமி கோவில் வாசல் வரை பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பிரேமலதாவுக்கு வேல் ஒன்றை பரிசாக வழங்கினார்.

விருதுநகர் தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். மத்திய அரசின் நிதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியை பயன்படுத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று பிரசாரம் செய்தார் பிரேமலதா.

குறிப்புச் சொற்கள்