ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 11 தமிழக வீரர்களால் வாக்களிக்க இயலவில்லை

1 mins read
c401b12a-7be5-4c12-a810-2bfcbcdcbd87
(இடமிருந்து) வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ரவிச்சந்திரன் அஸ்வின், சிஎஸ்கே அணி வீரர் ஷ்ரதுல் தாக்கூர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎல் வீரர்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன், ஷாருக்கான், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உட்பட 11 வீரர்கள் பங்கேற்று பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால், வெளி மாநிலங்களில் உள்ள அவர்கள் தமிழகத்திற்கு வந்து செல்ல சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் அவ்வாறு விமானம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மேலும் இந்த 11 வீரர்களும் பயிற்சியில் ஈடுபட முடியாமல் போகும். இதுபோன்ற காரணங்களால் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இம்முறை தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டால் அவர்கள் தமிழகம் வரக்கூடும் என்ற ஒரு தகவலும் வெளியானது.

வெள்ளிக்கிழமை மாலை வரை இதுகுறித்து மேல் அதிக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்