ஈரோட்டில் ஒரேநேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

ஈரோட்டில் ஒரேநேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

1 mins read
7502e34c-2c17-44c4-91ca-9a1d5531c901
ஈரோடு கச்சேரி வீதி மாநகராட்சி பள்ளியில் வாக்களித்த மூன்று மதங்களைச் சேர்ந்த தோழிகள். - படம்: தமிழக ஊடகம்

ஈரோடு: ஈரோட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தோழிகள் ஒரே நேரத்தில் ஒன்றாகச் சேர்ந்து வாக்களித்தனர்.

ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இந்த சுவாரசியமான சம்பவம் நடந்தது. பிரியதர்ஷினி, ஜவஹாரா ருக்கையா, இலக்கிய சம்பத் ஆகிய மூன்று இளம் பெண்களும் முதல்முறையாக ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருந்தனர். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களான இவர்கள் மூவரும் சிறுவயது முதலே ஒன்றாகப் படித்து தோழிகளாக பழகி வருபவர்கள்.

புத்தாடை அணிந்து வந்திருந்த மூவரும் கூறுகையில், “நாங்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்களுக்குள் எந்த வேற்றுமையும் காண்பதில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் பாரம்பரியத்தை நாங்கள் பின்பற்றி வருகிறோம்,” என்றனர்.

குறிப்புச் சொற்கள்