அரசியலை விட்டு விலகத் தயார்: அண்ணாமலை

1 mins read
5038caa8-c70d-4113-a6f2-c18f084fd442
அண்ணாமலை. - படம்: ஊடகம்

சென்னை: பணத்தை வைத்துக் கொண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதியை வென்றுவிடலாம் என திமுக உள்ளிட்ட சில கட்சிகள் நினைத்துக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜகவை சேர்ந்த யாரேனும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக நிரூபித்தால் அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகத் தயார் என கரூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

“இது தர்மத்தின் போராட்டம், நியாயத்தின் போராட்டம். களத்தில் நின்று கொண்டு, பணத்தை வைத்து கோவை மக்களையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் வாங்கிவிடலாம் என்று திமுகவும் வேறு சில கட்சிகளும் நினைக்கின்றன.

“இந்தத் தேர்தலை நேர்மையாக, வெளிப்படையாக அறம் சார்ந்து நடத்தி இருக்கிறோம். எனவே, கோவை மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். கரூரிலும் பதிலடி கொடுப்பார்கள்,” என்றார் அண்ணாமலை.

முன்னதாக ‘ஜி பே’ என்ற செயலி மூலம் கோவையில் வாக்காளர்களுக்கு பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்