தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா

1 mins read
df029234-2fee-400a-9e5a-22f3873ceac9
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி. - படம்: தமிழக ஊடகம்.

மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) கோலாகலமாகத் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக வைகை அணையில் இருந்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணையில் உள்ள நீர்மின் நிலையம் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டிருக்கும் தண்ணீர் விரைவில் மதுரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவுக்காக வரும் 23ம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவிழா வரும் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். - படம்: தமிழக ஊடகம்.
குறிப்புச் சொற்கள்