சென்னையில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணம் குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கம்

நாடாளுமன்ற தேர்தல்; தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை

சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 1.90 கோடி பேர் (10.9 மில்லியன்) வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

69.46 விழுக்காடு பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 30.54விழுக்காடு பேர் வாக்களிக்கவில்லை.

இத்தேர்தலில் 623,339,25 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில், 190,367,81 பேர் வாக்களிக்கவில்லை.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில், 2024 தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் 3% சரிந்துள்ளது. கடந்த தேர்தலை விட 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு சரிந்துள்ளது.

இந்திய நேரப்படி இரவு 7 மணி அளவில் 72.09 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர், நள்ளிரவு 12 மணிக்கு தமிழகத்தில் பதிவான வாக்கு விழுக்காடு குறித்த பட்டியல் வெளியானது. அதில், தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு விழுக்காடு 69.46% என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால் கடந்த 2019 தேர்தலில் தருமபுரி தொகுதியில் 82.33% வாக்குகள் பதிவாகியிருந்தது,

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, வேலூர் ஆகிய 4 தொகுதிகளில் மட்டுமே கடந்த 2019 தேர்தலை விட சற்று அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது. மற்ற 35 தொகுதிகளில் கடந்த முறையை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

ஊரகப் பகுதிகளிலுள்ள தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் நகரப் பகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் பெரியளவில் வித்தியாசம் இருந்தது.

வடசென்னை தொகுதியில் 149,622,4 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், 60.13 விழுக்காட்டினர்தான் வாக்களித்துள்ளனர். அதாவது, 899,679 பேர் வாக்களித்துள்ளனர். 596,545 பேர் வாக்களிக்கவில்லை.

தென்சென்னை தொகுதியில் 202,313,3 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 54.27 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மத்திய சென்னை தொகுதியில் 135,016,1 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 53.91 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

இந்த அளவுக்கு மக்கள் வாக்களிக்காமல் இருந்ததற்கு தொடர் விடுமுறை, கடும் வெயில் காரணம் என்று கூறப்படுகிறது.

வாக்குப் பதிவின்போது, பெரியளவில் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏதும் நடைபெறவில்லை எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளையும் சேர்ந்த வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பான அறையில் வைக்கும் பணி லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது, “லயோலா கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில்156 கண்காணிப்புக் கருவிகள் பொருத்தி, தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை,” என்றார் அவர்.

வாக்குப்பதிவு மந்தமானது குறித்து செய்தியாளர் கேள்விகளுக்குப் பதிலளித்த ராதாகிருஷ்ணன், “தேர்தல் ஆணையம் சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். ஆனால் நகர்ப்புறத்தில் உள்ள மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக வாக்குப்பதிவு விழுக்காடு மந்தமாக இருந்தது,” எனக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!