கோவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

1 mins read
ea3f7e8d-46aa-48cd-b81c-304357fc4395
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. - படம்: ஊடகம்

கோவை: தாம் போட்டியிட்ட கோவை மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.

ஒருசில வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் பிரச்சினை இல்லை என்றும் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் நீக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 830 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும் கோவை தொகுதியில் திட்டமிட்டு ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“ஒரே இடத்தில் நிறைய வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.

“பெரும்பாலும் பாஜக ஆதரவாளர்களின் பெயர்கள்தான் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விவரங்களை ஆவணப்படுத்தி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம்.

“இதுபோன்ற சர்ச்சைகளைக் கடந்து மக்கள் உற்சாகமாக வாக்களித்துள்ளனர்,” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்