முதல்வர் தமிழகத்தை அடகு வைத்துவிட்டார்: அன்புமணி சாடல்

முதல்வர் தமிழகத்தை அடகு வைத்துவிட்டார்: அன்புமணி சாடல்

1 mins read
ff29e3ad-401d-4575-9891-2c990d9d96b3
அன்புமணி ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் வாய் திறக்க மறுப்பதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்றும் அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பதை அன்புமணி சுட்டிக்காட்டி உள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் காங்கிரஸ் கூட்டணிக்காக காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை அவர் அடகு வைத்துவிட்டாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

மேலும் எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகாவுக்கு தாரைவார்ப்பது திமுகவின் வழக்கம் என்றும் அன்புமணி சாடியுள்ளார்.

“தமிழகத்தின் அனுமதியின்றி காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையையும் கர்நாடக அரசாங்கத்தால் கட்ட முடியாது. அவை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி.

“மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவரையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்,” என அன்புமணி மேலும் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்