தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் 69.72% வாக்குப்பதிவு: நீடிக்கும் குழப்பம்

1 mins read
91424fef-60ea-4b8a-a555-ac9b83bddedb
நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்தனர். - படம்: ஊடகம்.

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் குறித்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது.

வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் 72% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், அன்று இரவே 69.46% வாக்குகள் மட்டுமே பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தற்போது 69.72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்